| 
  xxii  | 
 
நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும் | 
  
 
  | 
  | 
  
 
 
  
 
 
 
 இவர் காட்டும் வசனமாகிய மேற்கோள்களுள், 
 சில பழைய செய்யுட்களின் 
 உறுப்புக்களாகவும், சில அவற்றின் உரைநடைகளாகவும், 
 சில மோனை எதுகைத் 
 தொடைகளமைந்த கட்டுரைகளாகவும், சில ஒன்றன் பரியாயப் பெயர்களாகவும் 
 காணப்படுகின்றன; | 
  
 
 | 
 (பழைய செய்யுட்களின் உறுப்புக்கள்) | 
  
 
  
      1. ஆடாவடகு (பக். 122) - ‘‘ஆடாவடகினுளுங்காணேன்’’ (திணைமாலை. 4.) 
  
      2. தீத்தீண்டுகையார் (பக். 122) - ‘‘தீத்தீண்டுகையார் தெரி வித்தல்காண்’’ 
 (திணைமாலை 4.) 
  
      3. இதனை, இதனால் (பக். 70) - ‘‘இதனை யிதனாலிவன் முடிக்கும்’’ (குறள் 517.) 
  
      4. அமரீர், அசுரீர் (பக். 156) - ‘‘அமரீரசுரீரழனாகரையீர்’’ (யா - வி. சூ. 
 53 - 
 உரை, மேற்.) 
	 | 
  
 
 | 
  (பழைய செய்யுட்களின் உரை நடை)  | 
  
 
  
      1. தச்சனால் இயற்றப்பட்டவையம் (பக். 147) 
 - ‘‘தச்சன் செய்த சிறுமா வையம்’’ 
 (குறுந்-61.) 
  
      2. குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் (பக். 221) - ‘‘நேரிழை மகளி 
 ருணங்குணாக் கவருங், கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’’ (பட். 22-3.) 
  
      3. குறுங்கானம்போப (பக். 181) - (சிறுபஞ்ச. 92, உரை.) 
  
      4. தைந்நீராடுப (பக். 181) - ‘‘தவத்தைந் நீராடுதல்’’ (பரி. 11.) 
  
      5. எறும்பு முட்டைகொண்டு திட்டை யேறின் மழை பெய்தது (பக். 209) - ‘‘பொய்யா 
 வெழிலி பெய்விடநோக்கி, முட்டை கொண்டு வற்புலஞ்சேருஞ், சிறுநுண்ணெறும்பின் 
 சில்லொழுக்கு’ (புறநா. 173.) 
	 | 
  
 
 | 
  (மோனை எதுகைத் தொடைகளமைந்த கட்டுரை.)  | 
  
 
  
      1. அடை, ஆடை; நரை, நாரை; முளை, மூளை: (பக். 36) 
  
      2. பைதல், பொய்தல் (பக். 36.) | 
  
  
 
  
   |