உரையாசிரியர் வரலாறு.

xxiii

   

(ஒன்றன் பரியாயப் பெயர்கள்.)

  கமலம், சரோருகம், தாமரை, பங்கயம் (பக். 71.)
இவருடைய கொள்கைகளுட் சில வருமாறு:-
 
1. ஆவி, உயிர், மெய், உடம்பு (எழுத்து) என்னும் பெயர்கள் இடுகுறியென்பது
(பக். 21)

2. அவன் முதலியவற்றைப் பகாப்பதமென்றல் (பக். 46)

3. சாரியை இன்னொலியே பயனாக வருமென்றல் (பக். 47)

4. வாவென்பது வம்மென்றாகுமென்றல் (பக். 57)

5. தமிழில் வரும் வடமொழிப் பதங்களுட் பொதுவெழுத்தால் வருவன
சிறப்புடையன, அல்லவை சிறப்பில்லாதனவென்றல் (பக். 58)

6. ஏகார வினா இடமுதலிய ஐந்தினும் யாவினா, கால முதலிய நான்கினும்
வருதலரிதென்றல் (பக். 136)

7. ‘அனைத்து’ என்னும் சொல் பன்மை யென்றல் (பக். 195) பகுபதமுடிபில் இவர்
கொள்கை வேறு; பிற்காலத்தவர் கொள்கை வேறு.

இவர் இவ்வுரையில் எடுத்துக் காட்டிய மேற்கோள்களுள்ள நூல்களுள் இதுவரையில்
தெரிந்தவற்றின்      பெயர்கள் வருமாறு;-

I. இலக்கியம் :
அகநானூறு, ஐங்குறுநூறு, ஐந்திணையெழுபது, ஐந்திணை யைம்பது, கலித்தொகை, களவழிநாற்பது, கார்நாற்பது, குறுந்தொகை, சிலப்பதிகாரம், சிறுபாணாற்றுப்படை, சீவகசிந்தாமணி, சூளாமணி, திணைமாலைநூற்றைம்பது, திரிகடுகம், திருக்குறள், திருச்சிற்றம்பலக்கோவையார், திருமுருகாற்றுப்படை, நற்றிணை, நாலடியார், நான்மணிக்கடிகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பழமொழி, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மணிமேகலை, மலைபடுகடாம், முத்தொள்ளாயிரம், முதுமொழிக்காஞ்சி.
II. இலக்கணம் :
அகத்தியம், அவிநயம், தொல்காப்பியம், பனம்பாரம், புறப் பொருள்வெண்பாமாலை,
யாப்பருங்கலக்காரிகை.

சில ஏட்டுப் பிரதிகளின் இறுதியில், ‘‘காண்டிகையுரை முற்றிற்று’’ என்னும் வாக்கியம்
காணப்படுதலால் இவ்வுரை காண்டிகை யுரையென்று கொள்ளற்பாலது.