நூலமைப்பு

எழுத்ததிகாரம்

நன்னூலார் போலப் பாயிரவியல் என்பதொன்றனைத் தனியே அமைக்காது பொதுச் சிறப்புப்பாயிரங்களை உரையிடையிட்ட பாட்டுடை நடையில் நூன்முக மாக முதற்கண் விளக்குகின்றார்.

நன்னூலார்போல ‘மாடக்குச்சித்திரம்’ முதலிய உவமங்கள்கொண்டு பாயிரத்தின் சிறப்பை விளக்குதலை நினையாது, பண்டையார் மரபைப் பின்பற்றித் ‘திரு விளங்கிய மாநகரத்திற்கு உரு அமைந்த வாயில்மாடம்’ முதலிய உவமங்களால் பாயிரத்தின் இன்றியமையாமையை விளக்கி, அதன் பயனையும் அதனைக் கேளாதார் படும் இடுக்கண்ணையும் சுட்டி, அப்பாயிரத்தின் இரு பகுப்புக்களையும் தெரித்து, அப்பகுப்புக்களின் பெயர்க் காரணத்தையும் விளக்குகிறார்.

பொதுப்பாயிரம் ஈவோன்தன்மை முதலிய நான்கனையுமே சொல்லுவது என்ற பண்டையார் மரபைப் பின்பற்றிச் சாற்றி, பாயிரத்துள் நூலின் இயல்பு கூறுவது நேரிதன்று என்பதையும் உரையுள் விளக்குகிறார், ‘ஈவோன் தன்மை ஈதல் இயற்கை-