xx

தோடும், ஙகரமெய் சுட்டு யாவினா எகரவினா இவற்றின் பின்னர் அகரத்தை ஒட்டியும் முதலாக வரும் என்று சுட்டும் நன்னூலார் கொள்கையை ஏற்பவர் அல்லர். இங்ஙனம் நன்னூலார் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை முதலாகக் கொண்டு தமிழில் அருகிவரும் திசை  வட சொற்களை உள்ளடக்கித் தமிழில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களைக் கணக்கிடுதல் கூடாது என்ற எண்ணத்தர்போலும் இவர். மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் பற்றிய நன்னூலார் கருத்துத் தமக்கும் உடன்பாடாகவே, மொழிக்கு ஈறாமவற்றை அவர் மதம் பற்றிக் குறிப்பிட்டார். எனினும், “அளபெடைக்கண் குற்றுயிர் வடிவடிவில் அறிகுறியாய் எழுதப்படும்” என்ற நன்னூலார் கருத்து மக்கள் மனத்தில் சிவணுதல் கூடாது என்ற எண்ணத்தான் இயற்கையாய் வரும் குற்றுயீரிற்றினையும், அளபெடைக்கண் வரும் குற்றுயிரீற்றினையும் தனித்தனியே கணக்கிட்டு மொழியீற்றில் வரும் எழுத்துக்களை விளக்குகிறார். இறுதிக்கண் னகரத்திற்கு மகரம் போலி எழுத்தாய் வருவதனை உட்கொண்டு, ஈற்றுப் போலியை நன்னூலார் கருத்துப்படிக் கூறாது தொல்காப்பியத்தை ஒட்டிக் குறிப்பிட்டு, இறுதி மயக்கமாதலின் இறுதிநிலையை அடுத்துச் சுட்டுகிறார்.

அடுத்து, வேற்றுநிலை மெய்ம்மயக்கம் உடனிலை மெய்ம் மயக்கங்களை விளக்கி, நச்சினார்க்கினியர் போல மெய்ம் மயக்கத்தை ஒரு மொழிக்கண் மாத்திரம் கூறாது ஒருமொழி இருமொழி இரண்டன்கண்ணும் கொண்டு விளக்கிக் கூறி, பின், உயிர்மெய்ம்மயக்கம் கணக்கில் அடங்காது ஆதலின் அதனை விளக்கிக் கூறாது வாளாச் சுட்டி விடுக்கிறார்.

பின், ஈரொற்றுடனிலையை விளக்கும் ஆசிரியர் இயைபு பற்றி, லளமெய் திரிந்த னணமுன் மகாரம் ஈரொற்றாகிய காலை மகரக்குறுக்கமாகும் நிலை செய்யுட் கண்ணது என்று சாற்றுகின்றார்.