xix

ஒற்றளபெடை வருமாற்றையும் மேற்கோள் நூற்பாச் செய்திகொண்டு நிறுவுகிறார்.

ஐகாரம் தன்னைக் குறிக்கும் அளவிலும் அளபெடுக்கும் நிலையிலுமே குறுகாது என்றும், மற்ற இடங்களில் மொழி மூவிடமும் குறுகும் என்றும், ஒளகாரம் மொழி முதற்கண் குறுகும் என்றும், இவை பெரும்பாலும் செய்யுட்கண் தொடைநயம் நோக்கிவரும் என்றும் நவில்கிறார்.

லளமெய் திரிந்த னணமுன் வரும் மகரம் குறுகுமாற்றை ஈண்டேவிளக்கிச் சாற்றுகிறார். எழுத்துவடிவம் பற்றிப் பேசுகையில், ஏகார ஓகாரங்களுக்கும் எகர ஒகரங்களுக்கும், அகர உயிர் ஏறியமெய்க்கும் தனி மெய்க்கும் வேறுபாடு தெரிவிப்பன மேற்புள்ளிகளே என்று நவின்று, மேற்புள்ளிகள் முன்னிருத்த அளவினைச் செம்பாதி யாக்குமாற்றை அறிவிக்கிறார்.

மாத்திரை கூறும் நூற்பாவில், தனி எழுத்துக்களுக்கே ஒலியளவு கூறி, இரண்டு மூன்று எழுத்துக்களால் ஆகும் உயிரளபெடைக்கும் ஒற்றளபெடைக்கும் அளவினைஉரையிலேயே குறிப்பிடுகிறார். வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம், வருமொழியில் வல்லெழுத்து வருவழிக் கால்மாத்திரை அளவினதாதலும் உரையிலேயே குறிப்பிடப்படுகிறது. மாத்திரை பற்றிய விளக்கங்கள் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியனவே. அடுத்த நூற்பாவில் எழுத்துக்கள் அளவு கடந்து ஒலிக்கும் இடங்கள் சுட்டப்படுகின்றன.

மொழிக்கு முதலாகும் எழுத்துகளைத் தொல்காப்பியனார் கருத்தை உட்கொண்டு பெரும்பாலும் பழந்தமிழ் மரபு நோக்கிச் சொல்லும் இவர், சகரமெய் ஐகார ஒளகார உயிர்களோடும், யகரமெய் அகர உகர ஊகார ஒளகார ஓகாரங்களோடும், ஞகரமெய் அகரத்