xviii

உரையிற் சாற்றி, குற்றியலுகரம் உயிரின் குறுக்கம் ஆயினும், புணர்ச்சிக்கண் மெய்போல உயிர் ஏற இடங் கொடுத்தல் முதலியவற்றான் சார்பெழுத்தாயினவற்றை நன்கெடுத்தியம்புகிறார்.

ஆய்தம் பற்றிய தொல்காப்பிய நூற்பாவினையே நன்னூலார்போலத் தாமும் குறிப்பிட்டு, ஆய்தம் குறிலிணைக்குப்பின் வரும் பொருண்மையைச் சுட்டி, அது புள்ளியுள் அடங்காததன் காரணத்தையும் தெரிவிக்கிறார்.

உயிர்மெய்யின் வரிவடிவு ஒலிவடிவு இரண்டனையும் உட்கொண்டு நூற்பாவில் இலக்கணம் சாற்றும் இவர், அந்நூற்பா வுரையில் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய நூற்பாக்கள் பலவற்றில் குறிப்பிடும் செய்திகளை இயைபுபடுத்தி உரைக்கிறார்.

நெட்டெழுத்துக்கள் தத்தம் இனமாகிய குற்றெழுத்துக்களுடன் கூடியே அளபெடையை உண்டாக்கும் தமிழ் மரபை நன்கு விளக்கி, நன்னூலார் நெடிலே மூன்று மாத்திரையாயும் நான்கு மாத்திரையாயும் அளபெடுக்கும் எனவும் “அவற்றவற்று இனக்குறில் குறியே” எனவும் கூறிய வடநூல் மரபைமறுத்து, நச்சினார்க்கினியர் தம் உரையைப் பின்பற்றி அளபெடை ஓசைக்கு விளக்கம் தருகிறார். அளபெடைக்கு உதவுதல் ஒன்றனையே பற்றி ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும்இனம் என்றல் ஆகாது என்பதைத் தொல்காப்பியனார் கருத்தாகச் சுட்டுகிறார்.

ஒற்றளபெடை குறிற்கீழும் குறிலிணைக்கீழும் இடையும் கடையும் வருமாற்றை நூற்பாவில் வரைந்து உரையில், ஒற்றுக்கள் ஓசையை நிரப்பிப் பொருள் வேறுபாடு காட்டாது செய்யுளில் இடையே தனித்து வருமாற்றையும் ஓரொற்றான் ஓசை நிரம்பாதவழி