xvii

எழுத்துக்களுக்கு இனஅடைவுகூறி, அவற்றின் நெடுங் கணக்கமைப்பின் முறைவைப்பையும் பெரும்பாலும் நச்சினார்க்கினியரை ஒட்டி ஓராற்றான் விளக்குகிறார்.

எழுத்துக்களின் பிறப்பைக் குறிப்பிடும்போது, அவற்றின் பிறப்பிடங்கள் முயற்சிக்கருவிகள் இவற்றைப் பொதுவகையால் நன்னூலையொட்டிக் குறிப்பிட்டு, பிறப்பிடங்களை விதக்கும்போது நச்சினார்க்கினியர் உரைத்தாங்குரைத்து, பின், முயற்சி வகைகளை நன்னூலாரை ஒட்டி யகரம் ஒன்று நீங்கலான ஏனைய வற்றிற்கு விதந்து, யகரத்தின் பிறப்பிற்குரிய முயற்சி “அடிநா அடியணம் உறுவதன்று; அண்ணங் கண்ணிய மிடற்றெழு வளியிசை உரலாணி யிட்டாற்போற் செறிவதே’ என்பதனை விளக்குகிறார்.

எழுத்து ஒன்று பலவாதலாகிய இலக்கணத்தை ஒலி வடிவம் வரிவடிவம் இரண்டற்கும் தனித்தனியாகத் தொல்காப்பிய நூற்பாக்கொண்டு விளக்குகிறார்.

குற்றியலுகரமே குற்றியலிகரமாய்த் திரியும் என்ற நன்னூலார் கருத்தினை விடுத்து, தொல்காப்பியனார்,

“யகரம் வருவழி இகரம் குறுகும்
 உகரக் கிளவி துவரத் தோன்றாது”

என்று கூறியதனை ஒட்டி, “யகரம் வரக்குறள் உத்தப வரும் இகரம்” என்ற நூற்பா அமைக்கிறார்.

நன்னூலாரையே பெரும்பாலும் பின்பற்றிக்குற்றியலுகரத்தின் இலக்கணத்தைக் கூறும் இவர், ஈறொற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகாமை. வல்லொற்றுத் தொடர்மொழி யிறுதிக் குற்றியலுகரம் வருமொழித் தொடக்கத்தில் வல்லெழுத்து வரின் கான்மாத்திரையது ஆதல், குற்றியலுகரத்தை ஈற்றயல் அசை பற்றிக் கணக்கிடக் கூடாது எனல் முதலியவற்றைக் குறைவற