xxiv காட்டுமாற்றை உட்கொண்டு, ‘க ட த ற ஒற்று இன்னே இறந்தகால இடைநிலை’ என்று நூற்பா யாத்து, ஏற்ற எடுத்துக்காட்டுக்களையும் உரையில் தந்துள்ளார். நிகழ்கால எதிர்கால இடைநிலைகளை நன்னூலை ஒட்டியே குறிப்பிடும் இவர், தம் உரையில் இவ்விடை நிலைகள்வேற்றுக்காலங்களைக் காட்ட வருமாற்றையும் நச்சினார்க்கினியர் சொல்லதிகாலத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளை அடியொற்றி விளக்கிச் செல்கிறார். காலங்காட்டும் இடைநிலைகளை ஏலாத சில வினைமுற்றுப் பகுபதங்களை அடுத்த நூற்பாவில் நிரல்பட அமைக்கும் இவர், அந்நூற்பா உரையில், நன்னூலார் இடைநிலையின்றிக் காலங் காட்டுவனவாக அமைந்த வினைகளைச் சுட்டி வரைந்த ‘றவ்வொ டுகரஉம்மை’ என்ற நூற்பாச்செய்தி சான்றோர் கருத்தொடு முரணுமாற்றைக் குறிப்பிடுகின்றார். கச்சினன் முதலிய குறிப்பு வினைமுற்றுக்களில் இடையில் காணப்படும் ‘இன்’ சாரியை அன்று, இடை நிலையே என்ற தம் கருத்தினைப் “பகுதி விகுதி பகுத்திடை நின்றதை வினைக்குறிப்பு இடைநிலை என்னல் வேண்டும்” என்ற நூற்பா வாயிலாகக் குறிப்பிட்டு, காலங் காட்டுதற்குப் பயன்படாது வாளா இன்னோசைபற்றி வரும் இவ்விடைநிலைகளை வினைப்பெயர்க்கண்ணும் கொள்ளுதல் வேண்டும் என்ற தம்கருத்தினைத்தெரிவிக்கின்றார். பல அரிய பகுபதச் சொற்களை இந்நூற்பா உரையில் பகுத்துக்காட்டி விளக்கந்தந்து இவ்வியலினை முடிக்கின்றார். தமிழ் மரபே கருதும் இவர் இவ்வியலில் தமிழ்ச் சொற்களுக்கே விளக்கம் தருதலின், நன்னூலார் வடமொழியாக்கத்தைப் பதவியலின்கண்ணே கூறியாங்குத் |