XL யாது அஃது இஃது உஃது என்பன அன்சாரியை பெறுதலையும் அஃது முதலியவற்றின் ஆய்தம் கெடுதலையும் தொல்காப்பிய நூற்பாக்கொண்டே விளக்கி, ஈற்றய லெழுத்தை ஈறு என்றே காட்டும் தொல்காப்பியனார் மதத்தைத் தாமும் ஏற்றுக்கொள்ளுகிறார். ‘ஒன்று முதல் எட்டு அளவாம்’ என்ற நூற்பாவில், வழக்கம்போலாது ஏழ் என்ற ழகர ஈற்றுச் சொல்லையும் உட்கொண்டு நன்னூலை ஒட்டி விளக்கம் தருவதோடு, உருபியலில் தொல்காப்பியம் கூறும் செய்திகளை எல்லாம் நச்சினார்க்கினியர்தம் உரையை ஒட்டி இந்நூற்பா உரையில் தந்துள்ளார். அதிகாரப் புறனடையில் எழுத்துப்பேறளபெடை முதலிய எஞ்சிய பொருள்கயைச் சுட்டுவதோடு, புறப் புறக்கருவி, புறக்கருவி, அகப்புறக்கருவி, அகக்கருவி, புறப்புறச்செய்கை, புறச்செய்கை, அகப்புறச்செய்கை, அகச்செய்கை என்பனவற்றையும் நச்சிநார்க்கினியர் உரைக்கு விளக்கம் தருவோர்போன்று வரைந்து எழுத்துப் படலத்தை முடிக்கிறார். இவற்றால், நூலாசிரியர் தம் உரையொடு பொருந்தும் தனித்தகுதியுடைய இவ்வெழுத்ததிகாரத்தை நோக்குழி, இவ்வாசிரியர் தொல்காப்பிய உரைகளில் தோய்ந்த அறிவுடையவராய், கற்பார் நன்னூலின் உருச்சிறுமையை நோக்கி அதனையே விரும்புதலின், தொல்காப்பியனார் கருத்துக்கு ஏலாத நன்னூல் நூற்பாக்களை மாற்றியும், ஏற்பன பலவற்றையும் கொண்டும், தொல்காப்பிய உரையாசிரியர்களால் அரியவாகக் கூறப்பட்டனவாய் நன்னூலிலோ அதன் உரையிலோ இடம் பெறாத பல செய்திகளை அடக்கியும், நன்னூலை யொத்த சிறுவடிவில் தொல்காப்பியம் போலப் பல செய்திகளையும் தன்னுள் அடக்கும் வகையில் நூற்பா மாத்திரம் யாத்தல் பயன் தாராது என்ற கருத்தான், |