XLVII

88பலசில வெனுமிவை தம்முன் றாம்வரி
னியல்பு மிகலு மகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரி
னகரம்ம விகற்ப மாகலு முளபிற.

170
90குறியதன் கீழாக் குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின்.

172
91அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே.

173
92சுவைப்புளி முன்னினமென்மையுந் தோன்றும்.

175
99இடைச்சொல் லேவோ முன்வரி னியல்பே.

201
100வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி.

181
101இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை.

182
102நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.

183
103மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
றம்மின வன்றொட ராகா மன்னே.

184
104ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே.

185
105திசையொடு திசையும் பிறவுஞ் சேரி
னிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற.

186
106எண்ணிறை யளவும் பிறவு மெய்தி
னொன்று முதலெட் டீறா மெண்ணுண்
முதலீ ரெண்முத னீளுமூன் றாறு
குறுகு மாறல் லவற்றினீற் றுயிர்மெய்
யேகு மேற்புழி யென்மனார் புலவர்.

188