| 142 | இல்லென் னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமு மாகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும்.
| 233 |
| 143 | புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும்.
| 234 |
| 144 | சுட்டு வகரமூ வினமுற முறையே யாய்தமு மென்மையு மியல்புமா மல்வழி.
| 235 |
| 145 | தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.
| 236 |
| 146 | உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.
| 238 |
| 147 | இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும் போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்ப்பது யாவர்க்கு நெறியே.
| 239 |
| 151 | ஆமா கோனவ் வணையவும் பெறுமே.
| 248 |
| 152 | எல்லா மென்ப திழிதிணை யாயி னற்றோ டுருபின் மேலும் முறுமே யன்றே னம்மிடை யடைந்தற் றாகும்.
| 245 |
| 153 | எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே.
| 246 |
| 154 | தான்றா நாமுதல் குறுகும் யான்யாம் நீநீ ரென்னெம் நின்னும் மாம்பிற குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல.
| 247 |
| 155 | வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே. | 250 |
| 157 | ஒன்று முதலெட் டளவா மெண்ணூர் பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமே லெல்லா மொடு மொன்பது மிற்றே.
| 249 |