LIII

30 ஙஞண நமன வயலள வாய்தங்
குறிலிணை குறிற்கீழ் மொழியிடை யிறுதியி
னளபெழு மவற்றோ டாயுங் காலே.

92
21 கசதப வொழித்த வீரேழன் கூட்ட
மெய்மயக் குடனிலை ரழவொழித் தீரெட்
டாகு முயிர்மெய் மயக்கள வின்றவை
தேருங் காலை மொழியிடைச் சிவணும்.

110
32 ஙம்முன் கவ்வும் வம்முன் யவ்வு
ஞநமுன் னினமும் யகரமும் டறமுன்
கசபவும் ணனமுன் இனமுங் கசஞப
மயவவு மம்முன் பயவவும் யரழமுன்
மொழிமுதன் மெய்யும் லளமுன் கசப
வயவு நின்று மயங்கு மென்ப.

111-117
36 அம்மு னிகரம் யகர மென்றிவை
யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன
விகர யகர மிறுதி விரவும்
புகரின் றுணர்ந்தோர் வரைந்தனர் போற்றல்.

125
37 நெட்டுயிர் காரமு மையௌக் கானு
மிருமைக் குறிலொற் றிவற்றொடு கரமுமா
மின்னசா ரியைபெறூஉ மெவ்வழி யானு
மெய்யி னியக்க மகரமொடு சிவணும்.

126
42 பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை
முன்னிப் புணர்த்தது முடித்தனர் கொளலே.

133
47 கடதற வொற்றின் னைம்பான் மூவிடத்
திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை.

142