| 61 | பதமுன் விகுதியும் பதமு முருபும் புணர்வழி யொன்றும் பலவும் சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமு மாகு மனையவை தெரித லறிவோர் கடனே.
| 243 |
| 68 | இஈ ஐவழி யவ்வு மேனை யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையு முயிர்வரி னுடம்படு மெய்யென் றாதல் வரைவின் றென்மனார் மதிக்குங் காலே.
| 162 |
| 71 | பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய் வலிவரி னியல்பா மவற்றீற் றுயிர்முன் வன்மை மிகாசில விகாரமா முயர்திணை.
| 159 |
| 80 | எகர வினாமுச் சுட்டின் முன்ன ருயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு நீடலும் யகர நிலவலு நெறியே.
| 163 |
| 81 | ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் யவ்வன் மெய்வரி னவ்வுறு நவ்வுக் கவ்வு மாகும் வேற்றுமைக் கென்ப செவ்விதி னவ்விய றெரியுங் காலே.
| 207 |
| 82 | இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே.
| 165 |
| 84 | பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரி னைபோ யம்முந் திரள்வரி னுறழ்வு மட்டுறி னைகெட் டாவு மாம்பிற.
| 203 |
| 89 | அல்வழி யாமா மியாமுற் றிறுதி யாவினா விவற்றுமுன் வல்லெழுத் தியல்பே.
| 171 |
| 93 | பவ்வீ யல்வழி யியல்பு மீமுன் னியல்பும் வலிமெலி மிகலுமாம் வேற்றுமை.
| 178 |