LIX

30 னகர விறுதி யஃறிணைப் பெயருண்
மகரமொடு மயங்கி வருநவு முளவே.

34 லளமெய் திரிந்த னணவொடு மகார
மீரொற் றாகுஞ் செய்யு ளுள்ளே.

35தம்மர பிசைப்பின் முதலீ றிடைநிலை
யம்மர பில்லவு மாமென மொழிப.

38 எழுத்தே தனித்து மிணைந்துந் தொடர்ந்தும்
பதமாம் பொருடரி னதுபகாப் பதம்பகு
பதமென வாயிரு பகுதித் தென்ப.

40 பகாஅப் பதம்பகாஅப் பண்பிற் பயின்று
பெயர்வினை யிடையுரி யெனநால் வகைத்தே.

41 பகுபதம் பகுக்கும் பண்பிற் றாகி
வினையே வினைப்பெய ரெனவிரு பாற்றே.

43 நடவா மடிசீ விடுகூ வேவை
நெப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
றின்னவை முதல வெல்லா வினையுந்
தெரிநிலை வினையின் முதனிலை யாகும்.

44 முன்ன ரோதிய முதனிலை யிறுதியின்
விப்பி யென்பவற் றொப்பது தனிவரி
னேவல் வினைமுதற் றெரிநிலை வினையின்
மேவரு பகுதி யாமென மொழிப.

45 பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலே
குறிப்பு வினையி னெறிப்படு முதனிலை

46 அன்னா னள்ளா ளர்ரார் பம்மார்
அஆ குடுதுறு என்னே னல்லோ
டம்மா மெம்மே மோமொ டும்மூர்
கடதற ஐயா யிம்மி னிர்ஈர்
கயர வாலேல் காணும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே.