LXXVII

முன்னிலை வினையும் ஏவல்வினையும் வருமொழிக்கண் வன்கணம் முதலெழுத்தாகவரின், இயல்பாகவும் உறழாகவும் புணரும் என்பது.
                                                                        73

ஒளகார ஈறு, ஞநமவ என்னும் புள்ளியீறு, குற்றியலுகர ஈறு என்பன ஏவல்வினைக்கண்உகரம் பெற்றுப் புணரும் என்பதும், எனவே ஏவல் வினைக் கண் குற்றியலுகர ஈறு முற்றியலுகரமாம் என்பதும்.
                                                                        74

மெலி மிக வேண்டிய இடத்து வலியும் வலி மிக வேண்டியவிடத்து மெலியும் மிகுதலும், இயல்பு புணர்ச்சியிடத்து மிக்கும் புணர்தலும், உயிர்மிக வேண்டியவழி உயிர் கெடுதலும், சாரியை வர வேண்டியவழிச் சாரியை வாராமையும், சாரியை வருவழி உருபு விரிந்தே வருதலும், சாரியை வர வேண்டியவழிச் சாரியை பெறாது இயல்பாயும் மிக்கும் புணர்தலும், உயர்திணைப் பெயரிடத்து உருபு தொகாது விரிந்தே வருதலும், விரிவுப் பெயரிடத்தும் அங்ஙனமே வருதலும், திரிய வேண்டிய இடத்து இயல்பாதலும் போல்வன இரண்டாம் வேற்றுமை முடிபு வேறுபாடு என்பது.
                                                                        75

மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் எழுவாயின் தொழில் பற்றிய சொல் வருமொழியாய் வருமிடத்து, வருமொழி முதலெழுத்தாகிய வல்லினம் உறழ்ந்தும் சிலவிடத்து இயல்பாயும்வரும் என்பது.
                                                                        76

அவ்வழிக்கண் இகர ஐகார ஈறுகள் இயல்பாகவும், வல்லெழுத்து மிக்கும், உறழ்ந்தும் முடியும் என்பது.
                                                                        77

அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயரும், தம்மில் குறைந்த அளவுநிறை எண்களைச் சுட்டும் பெயர்கள் வருமொழியாய் வந்து புணரு