LXXVIII மிடத்து, இடையே ஏ என்ற சாரியை பெறும் என்பது. 78 நாழி என்ற அளவுப்பெயர்முன் உரி என்ற அளவுப்பெயர் வருமொழியாய் வந்து புணரின் நாடுரி என்றாகும் என்பதும், உரிஎன்ற நிலைமொழி ஏனைய வருமொழிகளோடு புணரும்வழி யகர உயிர் மெய் இடையே வரும் என்பதும். 79 எகர வினாவும் அ இ உ என்ற சுட்டும் நிலை மொழியாக, வருமொழி முதலில் உயிரும் யகரமும் வரின் வகரமும், ஏனைய எழுத்துக்கள்வரின் வந்த அவ்வெழுத்துக்களும் பெறும் என்பதும், செய்யுளிடத்துச் சுட்டிடைச் சொல்லாகிய நிலைமொழி நீண்டவழி யகரமும் வரும் என்பதும். 80 இருவழியும் ஞ ண ந ம லவளன என்ற ஒற்று ஈற்றுத் தொழிற்பெயர் வருமொழி முதலில் யகரம் அல்லாத ஏனைய மெய்கள் வரும்வழி உகரக் சாரியை பெறும் என்பதும், நகர ஈறு வேற்றுமைக் கண் உகரமேயன்றி அகரமும் பெறும் என்பதும். 81 இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கும் உயிர்முன், வருமொழி முதற்கண் வரும் வல்லெழுத்து மிக்கே புணரும் என்பது. 82 வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உயிரீற்று மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிக்கும், வல்லெழுத்து மிக்கும், அம்முச்சாரியை பெற்றும், அம்முச்சாரியை பெறாது வல்லெழுத்து மிக்கும் இவ்வாறு நான்கு வகையானே முடியும் என்பது. 83 பனை என்ற சொல் நிலைமொழியாக, வருமொழி முதலில் கொடி என்ற சொல்வரின் வல்லெழுத்து மிகும் என்பதும் ஏனைய வல்லெழுத்து வரு |