LXXIX

மொழி முதற்கண்வரின் ஐகெட்டு அம்முச்சாரியை பெறும் என்பதும், வருமொழியாகத் திரள் என்பது வரின் மிகுதலும் ஐகெட்டு அம்முப் பெறுதலுமாகிய இரண்டும் பெறும் என்பதும், அட்டு வரின் ஐகெட்டு ஆகாரம் பெறும் என்பதும்.
                                                                        84

சாவ என்ற வினையெச்சத்தின் இறுதி வகரம் கெடுதலும் உண்டு என்பது.
                                                                        85

அகர ஈறு:

செய்யிய என்னும் வினையெச்சம், அகரஈற்றுப் பெயரெச்சங்கள், அகரஈற்று முற்று, அ என்ற ஆறன் உருபு, அகரஈற்று அஃறிணைப் பன்மைப் பெயர், அம்ம என்ற இடச்சொல் ஆகியவை வருமொழியில் வன்கணம் வரினும் மிகா என்பது.
                                                                        86

வாழிய என்ற முற்றின் யகரம் கெடும் என்பதும், அது கெடினும் கெடாது நிற்பினும் வருமொழியொடு இயல்பாகவே புணரும் என்பதும்.
                                                                        87

பல சில என்பவை தம்முன் தாம்வரின் இயல்பாகவும், மிக்கும் அகரம்கெட லகரம் றகரமாகியும், பிற சொற்கள்வரின் அகரம் கெட்டும் கெடாமலும் புணரும் என்பது.
                                                                        88

ஆகார ஈறு :

அல்வழிக்கண் ஆ, மா, மியா, ஆகார ஈற்று முற்று, யா என்ற வினா இவை இயல்பாகவே புணரும் என்பது.
                                                                        89

தனிக்குறிலை யடுத்து வரும் ஆகார ஈற்றுப் பெயரின் ஆகாரம் அகரமாகியும், அதனொடு உகரம் பெற்றும், திரிபு எதுவும் இன்றி இயல்பாகவும் புணரும் என்பது.
                                                                        90