LXXXIII

ஒன்றுமுதல் எட்டு ஈறாகிய ஏழ் நீங்கலான ஏழ் எண்களின் பெயர்களும் நிலைமொழியாய் நிற்க, வருமொழியில் பத்து என்பது வந்து புணரின், அப்பத்து என்பது பது என்றோ பஃது என்றோ திரிந்து புணரும் என்பது.
                                                                        113

ஒன்பது ஒருபஃது என்பனவற்றின் முன் ஒன்று முதல் ஒன்பது ஈறாகிய சொற்கள் வந்து புணருமிடத்துப் பத்து என்பதன் இடையொற்றுக்கெடாது என்பது.
                                                                        114

பத்து என்ற நிலைமொழிமுன் வருமொழி பலவும் வரும்இடத்து, இடையொற்றுக்கெட, இன் சாரியையும் இற்றுச் சாரியையும் ஏற்றபெற்றி வரும் என்பதும், ஒன்பதும் இத்தன்மையதே என்பதும்.
                                                                        115

பத்து என்பதனோடு இரண்டு வந்து புணரின், பன்னிரண்டு என்றாகும் என்பது.
                                                                        116

ஒன்பது நீங்கலான ஒன்றுமுதல் எட்டு ஈறாகிய எண்ணுப்பெயர்கள் இரட்டித்து வரும்போது, நிலை மொழியின் முதலெழுத்து நீங்கலான ஏனைய நீங்க, வருமொழி உயிராயின் வகரமும், மெய்யாயின் அம்மெய்யெழுத்தும் இடையே மிகுதல் மரபு என்பது.
                                                                        117

ஒடு ஓடு என்ற மூன்றன் உருபுகளும், அது ஆது என்ற ஆறன் உருபுகளும், வருமொழியொடு இயல்பாகவே புணரும் என்பது.
                                                                        118