LXXXII

குற்றியலுகர ஈறுகள் சில ஐகார ஈறுகளாகத் திரியும் என்பது.
                                                                        104

திசைப் பெயர்களோடு திசைப் பெயர்களும் பிறபெயர்களும் புணருமிடத்து, வடக்கு குணக்கு குடக்கு கிழக்கு என்பனவற்றின் ஈற்று உயிர்மெய்யும் அதனையடுத்த ககர ஒற்றும் கெடும் என்பதும், தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும், மேற்கு என்பதன் றகரம் லகரமாகவும் திரியும் என்பதும், பிற மாற்றங்கள் நிகழ்தலும் ஆம் என்பதும்
                                                                        105

குற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர்கள் பொதுவாகப் புணரும்போது நிகழும் மாற்றங்கள் இவை என்பது
                                                                        106

ஒன்று ஒரு எனவும், இரண்டு இரு எனவும் திரிந்து வருமொழியோடு புணரும் என்பது.
                                                                        107

மூன்று என்பதன் இடையொற்றுக் கெடுதலும் வருமொழி யொற்றாகத் திரிதலும் ஆம் என்பது.
                                                                        108

நான்கு என்பதன் னகரம் லகரமாகவும் றகரமாகவும் திரியும் என்பது.
                                                                        109

ஐந்து என்பதன் நகரம் வருமொழி யெழுத்தாகவும் அதன் இனஎழுத்தாகவும் திரிதலும், கெடுதலும் பொருந்தும் என்பது.
                                                                        110

எட்டு என்பதன் டகரம் ணகரமாகும் என்பது.
                                                                        111

ஒன்பது பத்து - தொண்ணூறு எனவும், ஒன்பதுxநூறு-தொள்ளாயிரம் எனவும் புணரும் என்பது.
                                                                        112