LXXXI

எகர ஒகர ஈறுகள் :

எகரம் தேற்றத்தின் கண்ணும் ஒகரம் சிறப்பின் கண்ணும் அளபெடை யீறாய் வரும் என்பதும், முன்னிலை ஏவல்வினைக்கண்ணும் அவை அளபெடை யீறாய் வரும் என்பதும், வினைக்கண் மிக்கு முடியும் என்பதும்.
                                                                        97

தேற்ற எகரமும் சிறப்பு ஒகரமும் வருமொழியொடு இயல்பாகவே புணரும் என்பதும்
                                                                        98

ஏகார ஓகார ஈறுகள் :

ஏகார இடைச்சொல்லும் ஓகார இடைச்சொல்லும் இயல்பாகவே புணரும் என்பது.
                                                                        99

குற்றியலுகர ஈறு:

குற்றியலுகர ஈற்றுள் வன்றொடர் அல்லாத ஏனைய ஐந்து தொடர்களும் அல்வழிக்கண் இயல்பாகவே புணரும் என்பது.
                                                                        100

இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்று இரட்டாத நெடில்தொடர், ஒற்று இரட்டாதஉயிர்த் தொடர் என்பன வேற்றுமைக் கண்ணும் மிகா என்பது.
                                                                        101

டு, று என்ற குற்றியலுகர ஈற்ற நெடில் தொடரும், உயிர்த்தொடரும் வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இரட்டும் என்பது.
                                                                        102

மென்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் சில, வேற்றுமைக்கண் இனமான வல்லொற்றாக இடை மெல்லொற்றுத் திரிதலைப் பெறா, பல பெறும் என்பது.
                                                                        103