LXXXV

வரின் இயல்பாயும், உயிர்வரின் இயல்பாய் முடிதலொடு இரு தகரஒற்று இடையே பெற்றும் முடியும் என்பது.
                                                                        124

எகின் என்ற பறவைப் பெயர் இயல்பாயும் வலியும் மெலியும் மிக்கும் புணரும் என்பது.
                                                                        125

குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும் என்பது.
                                                                        126

மின் பின் பன் கன் என்பன தொழிற்பெயர் போல உகரம் பெறுதலும், அவற்றுள் கன் என்பது வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அகரமும் வல்லெழுத்தும் பெறுதலும் ஆம் என்பது.
                                                                        127

அழன் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் ஈறு கெடும் என்பது.
                                                                        128

மகர ஈறு :

மகர ஈற்றுமொழிகள் நாற்கணமும் வர, இரு வழியும் ஈறுகெட்டு உயிரீறுபோலவாகி வல்லெழுத்துவரின் அவைமிக்கும், ஈறுகெடாது இனமெல்லெழுத்தாய்த் திரிந்தும், மென்கணம் இடைக்கணம் என்பனவரின் இயல்பாயும், உயிர்வரின் உடம்படுமெய் பெற்றும் புணரும் என்பது.
                                                                        129

வேற்றுமைப் புணர்ச்சியில் வன்கணம்வரின் மகர ஈறு கெட்டு வல்லெழுத்து மிக்கும் மெல்லெழுத்துமிக்கும் உறழ்ந்தும், அல்வழிக்கண் உயிர்க்கணமும் இடைக்கணமும்வரின் ஈறு கெடாது இயல்பாயும் முடியும் என்பது.
                                                                        130

அகம் என்பதன் முன் செவி கை என்பன வரு மொழியாய்வரின் இடையிலுள்ள ககரம் கெடும் என்பது.
                                                                        131