LXXXVI

ஈம் கம் உரும் என்பன தொழிற்பெயற்போல உகரம்பெறும் என்பதும், ஈமும் கம்மும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரமேயன்றி அகரமும் பெறும் என்பதும்.
                                                                        132

யரழ ஈறு :

அல்வழிக்கண் யரழ ஈற்றுச்சொற்கள் வன்கணம்வரின் இயல்பாகவும் மிக்கும் புணரும் என்பதும், வேற்றுமைக்கண் மிக்கும் உறழ்ந்தும் புணரும் என்பதும்.
                                                                        133

தமிழ் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அகரச் சாரியை பெறும் என்பதும், தாழ் என்ற சொல் கோல் என்ற சொல்லொடு புணரும் வழியும் அகரச் சாரியை பெறும் என்பதும்.
                                                                        134

கீழ் என்ற சொல் இயல்பு, மிகுதி என்ற விகற்பம் பெற்று முடியும் என்பது.
                                                                        135

ஏழ் என்ற எண்ணுப்பெயர் எண் முதலியவற்றொடு புணரும்வழி, ஆறு என்பதுபோல நெடுமுதல் குறுகியும் ஏற்புழி உகரம் பெற்றும் புணரும் என்பது.
                                                                        136

லகர ளகர ஈறு :

லகர ளகர ஈற்றுச் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழியில் வன்கணம்வரின் முறையே றகர டகரங்களாகவும், அல்வழிக்கண் உறழ்ந்தும் முடியும் என்பதும், இருவழிக்கண்ணும் மெல்லெழுத்து வருமொழி முதற்கண்வரின் முறையே னகர ணகரங்களாகத் திரிந்தும், இடையெழுத்துவரின் திரிபின்றி இயல்பாகவும் புணரும் என்பதும்.
                                                                        137