LXXXX வகர ஈற்றுச் சுட்டுப்பெயர் அற்றுச் சாரியை பெறும் என்பது. 155 யாது, அஃது, இஃது, உஃது, என்பன உருபு ஏற்கும்போது அன்சாரியை பெறும் என்பதும், அன்சாரியை பெறும்வழிச் சுட்டுப்பெயர்களில் உள்ள ஆய்தம் கெடும் என்பதும். 156 ஒருபது முதலிய சொற்கள் உருபு ஏற்கும்போது இடையே ஆன்சாரியைவரின் பத்து என்பதன் பகரஒற்று நீங்கலான ஏனைய கெடும் என்பதும், ஒன்பது என்பதும் ஆன்சாரியையோடு உருபு ஏற்கும்போது இப்பெற்றியதே என்பதும். 157 சொல்லப்படாத புணர்ச்சி முடிபுகளைச் சொல்லப்பட்ட முடிபுகளொடு ஒட்டி நோக்கி ஏற்றபெற்றி அமைத்துக் கொள்க என்பது. 158 செய்யுளுக்கென்றே வரையறுக்கப்பட்ட விதிகள் : 19 | இசைகெடின் மொழிமுத லிடைகடை நெடில்வழித் தத்த மொத்த குற்றெழுத் தோடள பெழூஉ மையௌ இஉ என்னு மாயீ ரெழுத்தோ டளபெழு மென்ப. | | | 34 | லளமெய் திரிந்த னணவொடு மகார மீரொற் றாகுஞ் செய்யு ளுள்ளே. | | | 57 | வலித்தல் மெலித்தல் நீட்டங் குறுக்கம் விரித்தல் தொகுத்தலும் வருக்செயுள் வேண்டுழி. | | | 80 | தூக்கிற்சுட்டு, நீடலும் யகரம் நிலவலு நெறியே. | | | 90 | குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின். | | | 91 | அன்றி இன்றியென் வினையெஞ் சிகரந் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே. | | | 95 | அன்றுவரு காலை ஆவா குதலு மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ் செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப. |
|