1 | தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி அன்றே. |
| |
2 | மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே. (இவை இரண்டு நூற்பாக்களும் பனம்பாரம்) |
| |
3 | நெடிலே குறில்நெடில் குறில்இணை என்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற்று இறுதிஎன்று ஏழ்குற் றுகரக்கு இடன்எனல் மொழிப. |
| |
4 | தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈறுஎன நால்வகைப் படூஉம்அளவு ஆய்வரும் இடனே. |
| |
5 | இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும். |
| |
6 | செய்யுட்கண் ஓசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பாடு இன்றி அணையுமாம்-மைதீர்ஒற்று இன்றியும் செய்யுள் கெடின்ஒற்றை உண்டாக்கும் குன்றுமேல் ஒற்றளபும் கொள். |
| |
7 | மாத்திரை வகையான் தளைதம கெடாநிலை யாப்புஅழி யாமைஎன்று அளபெடை வேண்டும். |
| |
8 | தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணேயாம் சொல். |
| |
9 | பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர். |