LXXXXII

பதிகம்

பொன்மலை நின்று தென்மலை யுற்ற
அகத்திய முனிவன் சகத்தவர்க் காகச்
செந்தமி ழிலக்கண முந்துநூல் கிளப்பப்
பல்கா லுன்னித் தொல்காப் பியமுனி
யியற்றமிழ் முதலினின் றெடுத்துணர்த் திடவத
னொட்பங் கண்டு தட்பங் கூரா
தைந்திய லுந்தம் புந்தியின் வேறுகொண்
டுறைத்த புலவர் வரைத்த வுரையான்
முதலு முடிவுஞ் சிதர்தரப் பலவாய்க்
கிடந்த வியலைத் தொடர்ந்தொரு வழிப்பட
வீட்டலா னிலக்கண விளக்க மென்ன
நாட்டினன் வைத்திய நாத தேசிக
னன்னவன் றவத்தி னாலவ தரித்த
முன்னவன் பாயிர மொழிந்துசொல் லணியுந்
தற்பவ முதன்மூன் றிற்பட நாடிப்
பகர்ந்தன னிளவல்பன் னூலு மாராய்ந்
துகந்துதொல் காப்பியத் துண்மை தோன்ற
வைந்திய லுந்தன் புந்திசான் றாகத்
தந்தைமுன் னுரைத்தநூ றான்முடி பெய்த
வந்த ணாரூர்ச் சந்திர மௌலி
யருளுட் கொண்டு மருண்மன நீங்கிப்
புலங்கொளப் பாட்டிய லிளங்க வுரைத்தனன்
வாய்மைதரு தியாக ராய தேசிகனே.

(இப்பதிகச் செய்யுள் பிரித்து எழுதப்பட்டநிலை
பின்வருமாறு)

பொன்மலை நின்று தென்மலை உற்ற
அகத்திய முனிவன் சகத்தவர்க்கு ஆகச்
செந்தமிழ் இலக்கண முந்துநூல் கிளப்பப்
பல்கால் உன்னித் தொல்காப் பியமுனி