பதிப்பாசிரியர் முன்னுரை

பதினேழாம் நூற்றாண்டில், தமிழ் வடமொழி இரண்டன்கண்ணும் தக்க புலமைபெற்றுத் தமிழில் இலக்கண நூல் யாத்த சான்றவர் மூவருள், ஏனையார் இருவரும், எழுத்துச்சொற்பொருள் மூன்றனுள் சிறப்புப்பற்றிச் சொல்லிலக்கணம் ஒன்றுமே விரித்துரைத்தாராக, அம்மூன்றனையும் பற்றி ‘இலக்கண விளக்கம்’ என்ற முழுநூல் யாத்த வைத்தியநாத நாவலருடைய அந்நூலின் இரண்டாம் பகுதியாகிய இச்சொற்படலத்தை, சென்ற நூற்றாண்டின் இறுதியில் திருவாளர். தாமோதரம்பிள்ளையவர்கள் வெளியிட்ட இலக்கணவிளக்கப் பதிப்பினையும், தஞ்சை சரசுவதிமகாலில் உள்ள கையெழுத்துப்படியினையும் அவ்வாசிரியர் தாம் எடுத்து மொழிந்துள்ள பண்டை உரையாசிரியர்தம் உரைப்பகுதி அமைந்துள்ள நூல்களோடு ஒப்புநோக்கித் திரிபுகாணுமிடத்துக் கசடு நீக்கிப் பாடங்களுள் நல்லனகொண்டு, எழுத்துப்படலம் போலவே உரைவிளக்கம், ஒத்த நூற்பாக்கள், எடுத்துக்காட்டு அகரவரிசை, உரைவிளக்கமேற்கோள் அகரவரிசை முதலியவற்றுடன் பதிப்பித்தல்வேண்டும் என்று சரசுவதிமகால் கௌரவ காரியதரிசி ஆகிய முதுபெரும்புலவர். திரு. நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்கள் எனக்கு ஆணையிட்டாராக, அவர்தம் நல்லாசியினால் வெளியிடப்படும் இச்சொற்படலப் பதிப்பின் காலத்தாழ்ப்புக்குப் பெரிதும் துணையாயின சரசுவதி மகால் நூல்நிலையத் தலைமைக்காப்பாளர், திரு. வே கோபால ஐயங்கார் அவர்கள் உள்ளிட்ட சான்றோருக்கும், இதனை விரைவில் நன்முறையில் அச்சிட்டளித்த வெற்றிவேல் அச்சகத்தாருக்கும், இதனைப் பதிப்பித்தற்கு எனக்கு இசைவளித்த சத்திரம் நிருவாகத்தினருக்கும், எனது நன்றியறிதலைத் தெரிவித்து, இப்பதிப்பிற்குப் பல்லாற்றானும் எனக்கு உதவிய என் உடன்பிறந்தாரும், என்னிடம் தமிழ்