பயின்றாருமாகிய திரு. வித்துவான் கங்காதரன் M.A., திரு. வித்துவான் சீநிவாசன் M.A., திரு. வித்துவான் தருமராசன் B.A., செல்வி. வித்துவான் கமலாம்பாள் ஆகியோருக்கு என் நல்லாசிகளை வழங்கி, என் குறைபாட்டான் இடையிடையே நிகழ்ந்திருக்கக்கூடிய தவறுகளைப் பொறுத்தருளுமாறு தமிழ்கூறும் நல்லுலகத்தை வேண்டி, தோன்றாகத் துணையாய் என்னை நற்பணிக்கண் உய்த்தருளும் ஐயாறன் அடியிணை இறைஞ்சி இப்பணியினைத் தொடர்கிறேன்.
 

46, மேலமடவளாகம்,
திருவையாறு.

  இங்ஙனம்,
தி.வே. கோபாலையர்