1. சுவாமிநாதத்தின் பதிப்பும் பிரதிகளும்
1924ஆம் ஆண்டு திரு. இ. கோவிந்தசாமி பிள்ளை அவர்கள்
சுவாமிநாதத்தை வெளியிடும் பணியை மேற்கொண்டார். பாயிரம் (14 நூற்பா),
எழுத்தாக்க மரபு (14 நூற்பா), பதமரபு (6 நூற்பா) ஆகிய மூன்று பகுதிகள்
மட்டுமே கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழிலில் துணர்
4-இல் (பக். 351-360, 369-70) அவரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும்
நூலின் முன்னுரையில்
‘இந்நூல் ஏறக்குறைய ஓரிரு நூற்றாண்டுகட்கு முன்னர் செந்தமிழ்
நாட்டிலுள்ள கல்லிடையூரில் தோன்றிய சாமிகவிராசன் எனும் சீரிய
புலவரால் இயற்றப்பட்டதாகும்; ஐந்து இலக்கணப்பகுதியை நன்கு இனிது
உணர்த்துவது; ஒவ்வொர் அதிகாரமும் தனித்தனி மும்மூன்று இயல்களை
உடையது; அந்தாதித் தொடையால் எண்சீர்கழி நெடிலடி ஆசிரியப்பாவால்
அடைமொழிகளைப் புணர்க்காது செய்யப்பட்டுத் திகழ்வது; பாயிரமும்
நூன்மரபும் உள்பட 213 செய்யுட்களை உடையது’.

என்று குறிப்பிடுவதால் நூல் முழுமையும் கிடைத்திருக்க வேண்டும்
என்பது தெளிவாகிறது. ஆனால் அவர் நூல் முழுமையும் ஏன்
வெளியிடவில்லை என்று தெரியவில்லை. ஏட்டுப்பிரதி திருநெல்வேலி
நீலமேகம்பிள்ளை என்பாரிடமிருந்து கிடைத்ததாகவும் அவ்வேடு ‘சிற்சில
இடங்களில் தொடர்மொழிகளும் சிற்சில இடங்களில் சிறு பூச்சிகளால்
அரிக்கப்பட்டமையின் எழுத்துகளும் காணப்பட்டில’ என்றும் கூறியுள்ளார்.
|