iii
என்பாரைக்கொண்டு
ஓலைச்சுவடியிலிருந்து பிரதிசெய்து அனுப்பிவைத்தார்கள். நானும் ஒருமுறை திருவனந்தபுரம் சென்று சுவடியைப்பார்த்துச் சில பகுதிகளை நேரில் பரிசீலித்து வந்தேன். கேரளப் பல்கலைக்கழகப் பிரதி எழுத்தாக்க மரபிற்கு மட்டுமே விருத்தி உரையோடு அமைந்திருந்தது. அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் இந்தப்பிரதியை உள்ளத்தில் கொண்டே சுவாமிநாதத்திற்கு விருத்தி உரை உள்ளது என்று கூறியிருக்கவேண்டும். ஆக, சுவாமிநாதத்திற்கு மூன்று பிரதிகள் இதுவரை கிடைத்துள்ளன. அவையே இங்கு பதிப்பிக்கப்படுகின்றன.
மூன்று பிரதிகளுக்குமுள்ள தொடர்பு :
பிரிட்டிஷ் பொருட்காட்சிப் பிரதி (பி. பொ. பி.), கரந்தைத்
தமிழ்ச் சங்கப்பிரதி (க. த. பி), கேரளப் பல்கலைக் கழகப்பிரதி (கே.ப.பி) என்ற மூன்றையும் ஒப்பிட்டு ஆராய்ந்த போது க. த. பிரதியும் கே. ப. பிரதியுமே பெரிதும் ஒப்புமை உடையனவாய்க் காணப்பட்டன. அதாவது இரண்டிற்கும் சிறு சிறு பாட வேறுபாடுகளே அமைந்து ஒற்றுமை மிகுதியாக அமைந்துள்ளன. ஆயினும் இந்த இரண்டு பிரதிகளும் ஒரு மூலப் பிரதியிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.
பி. பொ. பிரதிக்கும் இந்த இரண்டு பிரதிகளுக்கும் செய்யுட்களின் எண்ணிக்கையிலும் அமைப்பிலும் வேறுபாடு அமைந்துள்ளது. பாயிரமாக (நூல் வழி) பி. பொ. பிரதியில் 11 செய்யுட்களும், க. த. பிரதியில் 14 செய்யுட்களும், கே. ப. பிரதியில் இரண்டு செய்யுட்களுமே காணமுடிகிறது. பத மரபில் பி. பொ. பிரதி 5 செய்யுட்களும், க. த. பிரதி 6. செய்யுட்களும் கொண்டுள்ளன.
ஒரு செய்யுளுக்குள்ளேயே கருத்து அமைப்பு முறை மாறுபட்டுக் காணப்படுகின்றது. எழுத்தாக்க மரபின் 2-ஆம்
|