x
4. பாயிரம் பற்றிய குறிப்பு
தமிழகத்தில்
ஆராய்ச்சி எவ்வாறு நடைபெற்று வந்தது என்பது பற்றி
அறிந்துகொள்ள வரலாற்றுக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. முச்சங்கம்
பற்றிய இறையனார் களவியல் உரை, அதற்கு ஒரு வகையில் விடைதருகிறது.
ஆனால் அதன் உண்மையான விளக்கம் இன்னும் தெளிவு செய்யப் படாமலே
இருக்கிறது. ஆயினும் தொல்காப்பியத்தில் செய்யுளியலிலும் (164 முதல் 170
வரை) மரபியலிலும் (91 முதல் 111 வரை) உள்ள நூற்பாக்கள் நூலாராய்ச்சி
நடைபெற்றதை இலக்கண முறையில் பேசுகிறது. இதன் மூலம் நூலாராய்ச்சி
செய்யும் முறையும் நூல் பற்றிய விவரத் தொகுப்பு முறையும் பற்றிகூட
அறிஞர்கள் சிந்தித்து சில விடை கண்டிருக்கிறார்கள். என்று அறிந்துகொள்ள
முடிகிறது. இதுவே பிற்கால இலக்கண நூல்களில் பாயிரமாக வளர்ந்து
உருபெற்றது. பாயிரம் இலக்கணத்தில் முன்னுரையாக அமைந்துள்ளதால்
அதன் உண்மைச் சிறப்பு அறியப்படாமலே போய்விட்டது. ஆராய்ச்சித்
துறையில் இந்நூற்றாண்டில் புதிய சகாப்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள
தமிழுலகம் பழைய முறையின் சிறப்பையும் குறை நிறைகளையும்
அறிந்துகொள்ள முயலவேண்டும்.
பாயிரம் இப்போது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரண்டு
பிரிவாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது.
பொதுப்பாயிரம்
நூல்பற்றிய பொது ஆராய்ச்சியின் வழிகாட்டியாக
அமைந்துள்ளது. அவற்றுள் நூல்பற்றிய செய்திகளில் நூலாராய்ச்சியில் நம்
முன்னோர் கண்ட பொது உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. நூலின்
வகை, எழுமதம், பத்துக் குற்றம், பத்து அழகு, முப்பத்திரண்டு உத்தி
ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
நூலின் வகை வரலாற்று ஆராய்ச்சியைப் பின்பற்றியது. ஒரு துறையில்
உள்ள பல நூல்களை ஒப்பிட்டால்
|