xiv

வளைத்துக் கூறியதும் வருணனை நிறைவு பற்றிய அடிப்படை சிந்தனையை உடையவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

விளக்க நிறைவு என்பது மொழிக்கு இருக்கும் பல இலக்கணங்களில் சிறந்தது எது என்பதைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கூறுவது.* நமது இலக்கண ஆசிரியர்கள் கூறும் குற்றமும் குணமும் விளக்க நிறைவையே சுட்டி நிற்பதாகக் கொள்ளவேண்டும். ஆகவே இக்கொள்கை அடிப்படையில் இலக்கண நூல்களை ஆராயும் முயற்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது. நமது இலக்கணங்களின் குறை நிறைகளை விஞ்ஞான முறையில் அறிந்து கொள்வதற்கு இத்தகைய ஆராய்ச்சியே துணைசெய்யும்.

இக்கருத்து அடிப்படையில் குற்றமும் அழகும் ஆராயப்படுமானால் புதிய விளக்கம் கிடைப்பதோடு ஆராய்ச்சி முறை பற்றிய புதிய கருத்துக்களும் உண்டாகக்கூடும். உதாரணமாக இதுவரையில் மொழியியல் ஆராய்ச்சி - சிறப்பாக விதிமுறை ஒலியியன் ஆராய்ச்சி (Systematic phonology) ஒரு குற்றம் சில காரணங்களுக்காகக் குணமாகக் கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. வெற்றெனத் தொடுத்தல் என்று நம்முடைய இலக்கண ஆசிரியர்கள் கூறியதை ஒத்து மொழியியலார் Vacuous rule என்று குறிப்பிடுவர். ஆனால் இலக்கணத்தில் பொதுமையும் எளிமையும் ஏற்படுமானால்

* (Explanatory adequacy) is achieved when the associated linguistic theory provides a general basis for selecting a grammar that achieves the second level of success (i. e. descriptive adequacy) over other grammars consistent with the relevent observed data that do not achieve this level of success.