xiii
மட்டும் பொருந்துவதாகக்
கூறியுள்ளார். ஆனால் தா, வா, போ போன்ற
சொற்களும் ஓரெழுத்தொரு மொழியாகக் கருதப்படுவதால் உயிர் மெய்யையும்
சேர்த்துக் கூறாதது காட்சி நிறைவு இல்லாமல் குன்றக் கூறல் என்ற குற்றம்
ஏற்பட்டு விடுகின்றது. தமிழ்மொழி அமைப்பில் இன்னும் எத்தனையோ
உண்மைகள் வெளிக்கொணரப்படாமலேயே இருக்கின்றன. அதாவது மொழி
அமைப்பு விளக்கத்தில் காட்சி நிறைவு ஏற்பட்டு விட்டதாகக் கூறமுடியாது.
மொழி அமைப்பை
விளக்கும்போது ஒரு மொழி பேசுவோர்
அம்மொழி பற்றிய இயல்பாக அறிந்துள்ள இயல்பு நுண்ணறிவு வெளிப்படும்
வகையிலும் மொழியில் அடிப்படையாக அமைந்துள்ள ஒழுங்கைப்
பொதுமைட் படுத்திக் கூறும் வகையிலும் வருணனை நிறைவு அமையும்*.
அதாவது மொழியில் சில சொற்களையோ வாக்கியங்களையோ வைத்து
இலக்கணம் எழுதுபோதும்கூட பொதுமைப்படுத்தி-மொழி முழுமைக்கும்
பொருந்தும் வகையில் பொதுமைப்படுத்திக் கூற வேண்டும். தொல்காப்பியர்
மெய்ம்மயக்கம் கூறும்போது மொழியில் வராத மெய்ம் மயக்கங்களையும்
சேர்த்துக்கூறியதும், சில புணர்ச்சி முறைகளைக் கூறும்போது (கொற்றன்,
சாத்தன் போன்ற சொற்கள் வல்லெழுத்து முதலாக உடைய மகளின்
பெயரோடு சேரும்போது னகரம் வருமொழிக்கேற்ப மாறுகிறது என்று
சொல்லாமல் அம் சாரியை வருவதாகக் கூறியது (தொல். 350) நேரடியாகக்
கூறாமல் சற்று சுற்றி
* ...a correct account of the linguistic intution of the native speaker and specifies the observed data (inparticular) in terms of significant generalisations that express underlying regularities in the language N. Chomsky (current issues in Linguistic theory p. 28.)
|