xii
ஓத்து,முறை, வைப்பு,
தொகுத்துச் சுட்டல், உரைத்தும் என்றல், போன்றவை
நூல் எழுதும் பொதுமுறையைக் காட்டுகின்றன.
குற்றமும், குணமும்
நூல் மதிப்பீட்டுக் கருவிகள். நூலை வரலாற்று
முறையில் மட்டுமல்லாமல் தனிநிலையில் அதாவது வருணனை நெறிப்படி
(descriptive techniques) ஒரு நூலில் அமைய வேண்டாதன - குற்றமும்,
அமைய வேண்டியன - குணமும் என்னென்ன என்று விளக்குவதே பத்து
வகைக் குற்றமும், பத்துவகை அழகும் ஆகும்.
இன்றைய மொழியியல் ஆராய்ச்சியில் அதுவும் சிறப்பாக மாற்றிலக்கண
மொழியியலில் மதிப்பீட்டுமுறை (Evaluation procedures) என்று
குறிப்பிடுவதே பாயிரத்தில் குற்றமாகவும் குணமாகவும் குறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இலக்கண நூல்களையும் ஏனைய நூல்களையும் கூட மதிப்பிட
இவை பயன்படும். சாம்ஸ்கி என்ற மொழியியல் அறிஞர் இவை பற்றிச் சற்று
விரிவாக Current Issues In Linguistic Theory என்ற நூலில் (பக் 28-55)
விளக்கியுள்ளார்.
காட்சி நிறைவு (observational adequacy), வருணனை நிறைவு
(descriptive adequacy), விளக்க நிறைவு
(explanatory adequacy) என்ற
மூன்று நிறைவுகள், இலக்கணத்தில் அமைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்
அவர்.
மொழியின்
அமைப்பில் உள்ள எல்லா உண்மைகளையும் விட்டுவிடாமல்
எடுத்துச் சொல்லுதல் காட்சி நிறைவாகும். தொல்காப்பியத்தில் மொழிமுதல்
எழுத்துக்கள் இறுதி எழுத்துக்களில் காட்சி நிறைவு காணப்படுகிறது.
ஓரெழுத்தொருமொழி பற்றிய செய்தியில் காட்சி நிறைவு காணப்படவில்லை.
மொழி மரபில் ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்தொரு மொழி’ (தொல். 43)
என்று உயிரெழுத்துக்கு
|