xvi

முன்னெழுந்த இலக்கண நூல்களை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்கும் ஆராய்ச்சி வரலாற்று நிலையிலும் சாமிகவிராயரின் உளப்பாங்கை விளக்கும் நிலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அடுத்து சாமிகவிராயரின் தனிச்சிறப்பை விளக்கும் நிலையில் அவர் நூலில் காணப்படும் புதுமைகள் மொழி அமைப்பு நிலையிலும், கோட்பாட்டு நிலையிலும் விளக்கப்பட்டுள்ளன.

5. 1. சுவாமிநாதமும், முன்னூல்களும்

எல்லாத் தமிழ் இலக்கண நூல்களிடையேயும் சில கருத்துகள் (உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர், மெய் ஆகியவற்றின் பகுக்கும்முறை. உயிரெழுத்துக்களின் பிறப்பு. எழுத்துக்களின் மாத்திரை) பெரிதும் ஒற்றுமையாகக் காணப்படும். அதனால் எல்லா இலக்கண நூல்களும் ஒன்றையொன்று தழுவியதாகக் கொள்ள முடியாது; கொள்ளவும் கூடாது. நூல் முழுமையும் பார்த்தால் ஏதாவது ஒரு நூலையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது தெரியவரும். அந்த நூலை - அடிப்படையாகத் தழுவிக் கொள்ளப்பட்ட நூலை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். சில சமயத்தில் இதில் தவறு ஏற்பட்டுவிடுவது உண்டு. நேமிநாதம், பாயிரத்தில் அந்நூல் தொல்காப்பியக்கடலைக் கடக்க உதவும் படகு என்று குறிப்பிட்டுள்ளதால் தொல்காப்பியத்தையே பின்பற்றி எழுதியதாகக் கருதப்பட்டது. ஆனால் எழுத்ததிகாரத்தை விரிவாக அறிஞர்கள் ஆராய்ந்த போது வீரசோழியத்தையே பெரிதும் எழுத்ததிகாரம் தழுவிக் கொண்டுள்ளதாகக் கண்டுள்ளார்கள். எனவே ஒவ்வொரு இலக்கண நூலையும் வரலாற்று நிலையில் ஆராயும்போது அந்நூல் தனக்கு முன்னெழுந்த இலக்கண நூல்களை அடிப்படையாகக்கொண்ட நூல்தானா என்பதைச் சரியான முறையில் வரையறுக்க வேண்டும். பின்பு ஆராய எடுத்துக்கொண்ட நூல் அடிப்படையாகக் கொண்ட நூலை மாற்றியும், சேர்த்தும், திரித்தும், தொகுத்தும், விரித்தும் தழுவிக் கொண்டவற்றை