xvii

அடிப்படையான நூலுக்கு எழுந்த விமர்சனமாகக் கொள்ளலாம். மேலும் நூலாசிரியர்கள் தாங்கள் அந்நூலை எவ்வாறு ஆராய்ந்து அறிந்து வைத்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். அடிப்படையாக இல்லாத பிற நூல்களை ஏற்றுகொண்ட இடங்களை அடிப்படை நூலில் ஆசிரியர் கண்ட குற்றங்குறை காரணமாகக் கருதித் தழுவிக் கொண்டார் என்று நாம் விளக்க முயலலாம்.

பொதுவாக ஒரு இலக்கணநூல் தனக்கு முன்னெழுந்த பல இலக்கணநூல்களையும் எங்கெங்கே தழுவிக்கொண்டுள்ளது என்று மட்டும் தொகுத்துக்கூறுவதால் நூலின் ஆதாரங்களைப் புரிந்து கொள்ளலாமே தவிர நூலாசிரியரின் எண்ணத்தையும் மதிப்பீட்டையும் கோட்பாட்டையும் அறிந்துகொள்ளமுடியாது: இலக்கண ஆராய்ச்சியில் வளர்ச்சியும், போக்கும் சரியாக வரையறுக்க முடியாமல் போகும்; நூலாசிரியனைப் பற்றியும் சரியான முறையில் புரிந்துகொள்ள தவறியவர்களாக நாம் ஆகிவிடுவோம். ஒவ்வொரு நூலிலும் சிற்சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாட்டாகப் பொறுக்கி எடுத்துக்கொண்டுள்ளார் என்ற எண்ணத்தை நம்முடைய ஆராய்ச்சி ஏற்படுத்திவிடும்.

சுவாமிநாதத்தில் எழுத்தும் சொல்லும் நன்னூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நன்னூல் அமைத்த பாகுபாட்டு முறை (Classificatory method) யையும் எழுத்ததிகாரப் பகுப்பு முறையையும் பின்பற்றியுள்ளதால் (செ. வை. சண்முகம்-எழுத்திலக்கணப் போக்குகள், பெ. திருஞானசம்பந்தம்பிள்ளை மணிவிழா மலர் பக். 193-98) நன்னூலுக்குச் சுவாமிநாதம் பட்ட கடனைப்புரிந்துகொள்ளமுடியும் ஆயினும் இந்நூலாசிரியர் தொல்காப்பியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் சூறாவளி, முத்துவீரியம், பிரயோகவிவேகம், ஆகியவற்றின் கருத்துக்களையும் பின்பற்றியுள்ளார். இது நன்னூலுக்கு அவர் தரும் மதிப்பீடாக அதாவது நன்னூலில் கண்ட குறையை வேறு நூல்களின்