xxi

5. 1. 3. நன்னூலும் சுவாமிநாதமும்

சுவாமிநாதத்தின் எழுத்ததிகார அடிப்படை நன்னூலைத் தழுவியது என்று முன்னரே கூறப்பட்டது. சொல்லதிகாரத்தில் இலக்கண விளக்கமும் இலக்கணக் கொத்தும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. யகரம் அடிநாவில் தோன்றுகிற செய்தி

  ‘அண்ணக்குழியின் மிடற்றுக்கால் அடிநாப்பற்ற’ (சுவாமிநாதம் 17.2,3) என்று கூறப்பட்டிருப்பது.

‘அடிநா அடியணம் உறயத்தோன்றும்’
என்ற நன்னூலுக்கு (82) கடமைப்பட்டிருப்பதைக் காட்டும்.
  எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம் ... ... ...

என்ற நன்னூல் வரிகளே

  ‘எழுத்து ஒன்று பல பொருளைத் தரிற் பதம்’

என்ற சுவாமிநாத வரி (23.1) களாக மலர்ந்துள்ளன.

அஃறிணைக்குச் சுவாமிநாதம் ‘அவரல்லது உயிர் உள்ளவும் இல்லவுமாய்ச் செல்வது அஃறிணை’ (34.3) என்று கூறிய விளக்கம்

‘மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை’ என்ற நன்னூல் (261.2) வரியின் தழுவலே.

ஏகார இடைச்சொல் ஆறுபொருளை உடையது என்றது (சுவாமி 4.3,4) நன்னூலைத் தழுவியே கூறியதாகும்.

நன்னூலைப் பின்பற்றியபோதிலும் நன்னூலுக்குப் பிறர் கொடுத்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அம்முறையில் மாற்றி அமைத்துள்ளார்.