xxiii
’’
273, 274, 275 |
-- |
’’
38 |
’’
282 |
-- |
’’
39.3, 4 |
’’
323, 324 |
-- |
’’
49 |
’’
238 |
-- |
’’
50 |
’’
345, 351 |
-- |
’’
53 |
’’
454 |
-- |
’’
54.1 |
’’
375, 376 |
-- |
’’
58.1, 2 |
’’ 380, 382 |
|
|
’’ 388 |
-- |
’’ 61.1
|
’’ 411 முதல் |
-- |
சுவாமி. 34.3
|
419 வரை |
-- |
’’ 69
|
நன்னூலை அடிப்படையாகப் பின்பற்றியிருந்தும் பிற நூல்களைத்
தழுவிக் கொண்ட காரணம் அந்த நூல்களைப் பற்றிப் பேசுமிடத்தில்
விளக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நன்னூலில் சில
கருத்துக்கள் விடுபட்டுள்ளன என்று தொல்காப்பியம், இலக்கண விளக்கம்,
பிரயோகவிவேகம் போன்றவற்றைச் சில இடங்களிலும், நன்னூலில் கூறிய
கருத்துத் தவறெனக் கருதி இலக்கண விளக்கத்தைச் சில இடங்களிலும், கூறு
முறையில் சில ஒருமைப்பாடு வேண்டும் என்றும், புதிய கருத்துக்களை ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்றும், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து
ஆகியவற்றைச் சில இடங்களிலும் பின்பற்றியுள்ளார் என்று நாம் கூறலாம்.
5. 1. 4 இலக்கண விளக்கமும் சுவாமிநாதமும்
இலக்கண விளக்கத்தைத் தழுவியதற்கு ஒரு காரணம் நன்னூல் கருத்து
பொருத்தமற்றது என்று கருதியபோது இதன் கருத்து பொருத்தமாக
அமைந்திருந்ததே ஆகும்.
சார்பெழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறும்போது நன்னூலார்
ஒலிகளின் எண்ணிக்கையோடு மொழியில் வருமிடங்களையும் சேர்த்து
மிகைப்படுத்திக் கூறிவிட்டார்.
|