xxiv

அளபெடை-7 ஒலிகள். அவை மொழி முதல், இடை, கடை ஆகிய  இடத்திலும் வருவதால், 7x3=21 என்று கூறி விட்டார் நன்னூலார். இலக்கண  விளக்க உரையில் வரும் ‘உயிர் மெய்யொழித்து ஏனையவெல்லாம் இட  வேற்றுமையானன்றி எழுத்து வேற்றுமையால் அங்ஙனம் பல்காமையில்’  என்ற குறிப்பு சாமிகவிராயருக்கு நன்னூலார் கருத்தின் தவற்றை  உணர்த்தியிருக்கலாம். ஆகவே இலக்கண விளக்கத்தை மேற் கொண்டார்  ஆயினும் இலக்கண விளக்கத்தார் கூறாது விட்ட ஆய்தக்குறுக்கத்தை  நன்னூலைத் தழுவி ஏற்றுக்கொண்ட பண்பு, எதையுமே கண்மூடித்தனமாக  ஏற்றுக்கொள்ளாத தன்மையை வெளிப்படுத்துகிறது.

தவறாக இல்லாவிட்டாலும் நன்னூலார் கருத்தைவிட இலக்கண விளக்கத்தாரின் கருத்தே சிறந்தது என்ற எண்ணமும் சில இடங்களில்  இலக்கண விளக்கத்தைத் தழுவக் காரணமாக இருந்திருக்கலாம்.

சொல்லைத் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்ற  பவணந்தியார் பாகுபாட்டை ஒத்துக்கொள்ளாது தனிமொழி, தொடர்மொழி  என்ற வைத்தியநாத தேசிகர் பாகுபாட்டை ஒத்துக்கொண்டுள்ளார். (இ. வி.  160, சுவாமி. 34) அவ்வாறே குறிப்பு மொழியில் ஒன்றொழிப் பொதுச்  சொல்லைச் சேர்த்துக் கொள்ளாதது (இ. வி. 170, சுவாமி. 36). ஆய்தம்  தலையில் பிறக்கும் என்றது (இ. வி. 13, சுவாமி. 18 4) ஆகியவற்றையும்  இப்பிரிவில் அடக்கலாம்.

நன்னூலார் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தது என்று சிலவற்றைக்  கூறாதுவிட்டுச் சென்றுள்ளார். பழைய இலக்கியம் படிப்போர்க்கு  அச்செய்திகள் தெரிந்திருக்கவேண்டும்; அதற்கு இலக்கணம் உதவி  செய்யவேண்டும் என்ற அடிப்படையில் இலக்கணவிளக்கமும் அதைத்  தழுவிச் சுவாமிநாதமும் தங்கள் காலத்தில் வழக்கு ஒழிந்தவற்றிற்கும்  இலக்கணம் கூறியுள்ளன. இடைச்சொற்களில் எற்று (இ. வி. 263), மன்ற