xxxix

  ... ... ... ... ... ... ... பழையோர் வழியின் ஒன்றற்கு
ஒன்று இனமோடு விட்டு இயைபாய்
பாகுபடச் சொற்றிடலாம் (40. 2,3)
 

என்று அவர் தரும் விரிவான விளக்கமே சற்றுப் புதுமையானதாக உள்ளது.

எச்சத்திற்குத் தந்த விளக்கம் தனிச் சிறப்பு உடையதாகவே கருதவேண்டும்.

தொன்னூல் விளக்கத்தில் மட்டுமே வினையெச்சம், பெயரெச்சம் என்ற இரண்டு எச்சத்திற்கும் பொதுவாக
 

  எச்சமே தொழில் பொழுது என்று இவை தோன்றி
இடம்பால் தோன்றாது எஞ்சிய வினை...            (தொ. வி. 117)
 

என்று கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் சொல்லியல் நிலையில் அமைந்த விளக்கமாகும். ஆனால் தொடரியல் நிலையில் நினைத்துப்பார்த்து

‘முற்று இலது பிற சொல் நோக்குவது எச்சம்’ (52.1) என்று கூறியிருப்பதை சிறப்பானதாகவே கருதவேண்டும்.

5. 2. 2. மொழி அமைப்பில் புதுமை

தமிழ்மொழி அமைப்பை விளக்கும்போது பிற இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடாத சில உண்மைகளை இவர் கூறியுள்ளார். இவற்றில் சில பொது உண்மைகளாக எக்காலத்துக்கும் பொருந்துவன; வேறு சில மொழிவரலாற்று மாற்றத்தால் ஏற்பட்டதைக் கவனித்துக்கூறியதால் குறிப்பிட்ட காலமொழிக்கே அதாவது இடைக்காலத் தமிழுக்கே (Middle Tamil) பொருந்துவன.