The first two parts of this Grammar were
published in 1881, by the kind aid
of
Mr. Pattabiram Pillay, a Deputy Collector
in Government service.
It will be admitted that a complete
Tamil Grammar, treating of the 5 parts
in a style like that of the present work,
is a desideratum amongst the present
scholars; and I have therefore ventured to
publish the ‘’Muthuviryam” in full, by
obtaining the work in manuscript
from the author.
1889 S.. PULNEY ANDY,
M.D.,F.L.S.
முதற் பதிப்பின் பதிப்புரை
அகத்தியம், தொல்காப்பிய
முதலிய முன்னூல்களும், இலக்கணவிளக்க முதலிய
பின்னூல்களும், ஐந்திலக்கணத்தன வாயினும், அவை,
மூலமும் உரையும் மிகக் கற்றுவல்ல
சான்றோர்க்கே யன்றி ஏனையோர்க்கு அரிதுணர்
பான்மைத்தாய் அருநடையுள்ளன
வாதலானும்,
இது, எளிய நடையுள்ளதும், பழையன கழிதலால், அக்காலத்து
வழங்கிய சில
விதிகள், இக்காலத்து வழங்கிப் பெரும்பயன்றராமை கருதி
ஒழித்தும், புதியன புகுதலால்,
அக்காலத்து வழங்காதிருந்து இக்காலத்துப் பெரும்பயன்றருதல்
கருதிச்சேர்த்தும்
செய்யப்பட்டிருப்பதுமா யிருத்தலானும், இக்காலத்து,
ஐந்திலக்கணமும் முறையே யொருவாறு
கற்கப்புகு மாணாக்கர்க்கு மிகவும் பயன்படுமென்பதுகருதி, யாம்
இதனை அச்சிட்டு
வெளியிடலாயிற்று.
1889 S. P. A.
|