கி. பி. 12ஆம் நூற்றாண்டாகும்.
இதனை அடுத்துக் கருதத் தகுந்தது நன்னூலாகும். இதன்
சிறப்புப் பாயிரத்தில் ‘‘அரும்பொரு ளைந்தையும்
யாவருமுணரத் தொகைவகை விரியில்
தருகென”ச் சீயகங்கன் கேட்டுக் கொண்டதற்கிணங்கப்
பவணந்தியார் இந்நூலை
இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று இந்நூலிற்
காணப்படுவன எழுத்தும்
சொல்லுமேயாகும். ஏனைய பொருள், யாப்பணிகள் பற்றிய
இலக்கணம் அக்காலத்து இருந்து
அழிந்தன போலும். இந்நூலின் காலம் கி. பி. 12ஆம்
நூற்றாண்டாகும். இதன் பின்னர்
எழுந்தது இலக்கண விளக்கமாகும். தமிழ் மரபு தழுவி
மிக விரிவாக எழுந்த ஐந்திலக்கண
நூல் இதுவாகும். இதன் காலம் கி. பி. 17ஆம் நூற்றாண்டாகும்.
இதற்குப்பின் எழுந்த
ஐந்திலக்கண நூல் தொன்னூல் விளக்கமாகும். இஃது
ஐந்திலக்கணமும் கொண்டதாயினும் பொருள் பற்றி விளக்கும் முறை
மிகப் புதியதாகும். இது
கி. பி. 18ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகும்.
இதன் பின்னர் எழுந்த
நூல் முத்துவீரியமாகும். தமிழ் மரபையே பெரிதும்
தழுவி
மிக
விரிந்ததாய் அமைந்த நூல் இதுவாகும். இதன் காலம்
கி. பி. 19ஆம் நூற்றாண்டாகும்.
இக்காலத்தே சாமி கவிராசர் என்பவரால் சாமிநாதம்
என்ற பெயரில் ஐந்திலக்கணமும்
கொண்ட நூல் எழுந்தது. இந்நூல் முழுமையாக வெளிவந்திலது.
தண்டபாணி சுவாமிகள்
என்பார் இவ்வைவகை இலக்கணத்தோடு புலமை இலக்கணம்
என்ற ஒன்றைக் கூட்டி
அறுவகை இலக்கணம் என்னும் பெயரில் ஒரு நூல் செய்துள்ளார்.
முத்துவீரியம்:
இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்,
பொருளதிகாரம்,
யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐம்பெரும்
பிரிவுகளை உடையது. 1289 நூற்பாக்களை
உடையது. நூற்பாக்கள் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
ஒவ்வோர் அதிகாரத்திலும்
மும்மூன்றியல்களுள. அதிகாரந் தோறும் தனித்தனியே
கடவுள் வாழ்த்துக்களுள. ஐந்திலக்கண
நூல்களுள் மிகவிரிந்த நூல் இதுவாகும்.
நுவலும் பொருளும் திறனும்:
எழுத்ததிகாரம்:
இஃது எழுத்தியல், மொழியியல், புணரியல் என்னும்
மூன்று
பிரிவுகளை உடையது.
|