அறுவகையிலக்கணம்
1
பொதுப்பாயிரம்

காப்பு

1. ஐந்தே இலக்கணம்என்று ஆயிரம்பேர் கூறல்கண்டும்
செந்தேன்என்று ஆறுவிதம் செப்புவிப்பது-எம்தேகத்து
உள்ளும் புறம்பும் ஒளிரும் ஒருபொருட்சீர்1
விள்ளும் 2 குருபாத மே
(1)
அதிகாரி இலக்கணம்

2. பொன்னோங்கற் கோவும்3 பொதியைப்
பிரானும 4 புகழ்முருகோன்
நல்நோன்பு 5 நோற்கும் பயனே
புலமைநலம் எனத்தேர்ந்து
எல்நோக்கித 6 தெண்டன் இடுவாருக்கு
ஆம்இவ் விலக்கணநூல
முன்னோர் மொழியைப் பெருக்கிக
குறுக்கி மொழிவதன்றே.
(2)

1.
ஒப்பற்ற பரம் பொருளின் பெருமையை
2.
உபதேசிக்கும்
3.
பொன்மலையின் தலைவராகிய சிவபெருமான்
4.
அகத்தியர்
5.
சிறந்த வழிபாடு
6.
சூரியனைப் பார்த்து. (அறுசமயத்தினரும் சூரியனை வழிபடுவர். எனவே இங்ஙனம் கூறினார்)