இவ்வாறு முச்சந்தியிலே உழன்று கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மை, புனிதத் தன்மை தனித்தியங்கும் ஆற்றல் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, புலவர்களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டும் என அறிவுறுத்தி ஒரு நல்லவையில் கூறமுடியாதபடி ஆபாசமாகக் கொட்டுதல் தரமன்று எனத் தௌ¤வுறுத்தித் தமிழ்ப்புலவர்களைச் சமுதாயத்திற்குப் பயன்படுமாறு மடைமாற்றம் செய்தாக வேண்டிய வரலாற்று இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. காலத்தின் இக் கட்டாயம்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் புலமை இலக்கணம். |
புலமைஇலக்கணம் புகல்வது என்ன?
|
| தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனின் | |
|
வெகுளியற்று இருப்போன் வெறும்புல வோனே. |
(705) |
|
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில்¢ |
|
|
அஃதுஉணர் அலகையில் தாழ்வுஎனல் அறமே. |
(672) |
|
அருமை யறியான் அவையிடைப் புகுந்து |
|
|
பெருமைபா ராட்டலும் ஏனையும் பிழையே.
|
(692) |
|
காகப் புள்என இனத்தொடு கலவாது |
|
|
ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே.
|
(680) |
|
காமக் கடலே கதிஎனக் கருதிப் |
|
|
போவார் புலமையில் புண்ணியம் இன்றே.
|
(687) |
|
கால வேற்றுமை கருதாப் புலவன் |
|
|
சீலனே எனினும் சிறுமை யினனே.
|
(693) |
|
தமிழ்க்கும் தனக்கும் சார்தரு நெறிக்கும் |
|
|
தன்இனத் தினர்க்கும் தவறுஉறா வண்ணம் |
|
|
முயல்வோன் புலமை முதன்மைத் தாமே.
|
(747)
|
புலமைஇலக்கணத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஏழு நூற்பாக்களை ஓரளவு இவ்வியலின் சாரம் எனலாம். இந்
|