x

பட்டிருந்தும், நவநீத நடனார் வைணவ மதத்தவரென்பதும் வேறு கடவுளரிடத்தில் அவருக்குத் துவேஷ புத்தியில்லை யென்பதும் இக் கவியினாற் புலனாகின்றன. சிறப்புப் பாயிரத்திற் காணப்படும், ‘வேதத்தவன்’ என்ற சொல் இவர் அந்தணராவர் என்பதனைக் காட்டும். 

இவர் தமிழ் மொழியில் நல்ல புலமை வாய்ந்தவர்; அதனிடத்து நிறைந்த பற்றுள்ளவர். தம்மொழியை, ‘வேத முனிநாவார் தமிழ்’ என்று இவர் கூறுகின்றார். அகத்திய முனிவரைப் பல விடங்களிற் பாராட்டுகிறார். ‘ஓதுவர் தொன்னூற் பருணிதரே’, ‘அறைவர் கற்றோர்’,‘நாவலர் ஓதினரே’, ‘சான்றவர் கொள்ளார்’, ‘புலவரெல்லாரும் இயம்புவாரே’ போன்ற தொடர்களைப் பெரும்பாலும் ஒவ்வொரு செய்யுளிலும் பெய்து கூறுவது இவருக்கு இயல்பு. இவருடைய கலித்துறைகள் உரையின் துணையின்றி எளிதில் பொருள் விளங்குவனவாக அமைந்துள்ளன.