முகப்புதொடக்கம்
  

5. இதுவும் எட்டாரச்சக்கரபெந்தம்

481-ஆம்பக்கத்திலுள்ளது.

--------

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமது றவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே.

இது, இடக்குறுக்காரின் முனைநின்றுதொடங்கி அதனெதிராரின் முனையிறுதிசென்று முதலடிமுற்றி, அடுத்தஇடக்கீழாரின்முனைநின்று அதனெதிராரின் முனையிறுதிசென் றிரண்டாமடிமுற்றி, அடுத்தகீழாரின் முனைநின்று எதிர்த்தமேலாரின்முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி, அடுத்த வலக்கீழாரின்முனைநின்று அதன் எதிராரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி, முதலடிதொடங்கிய சேகாரம்தொட்டு வட்டைவழியிடஞ்சென்று எதிராரினிறுதியில் ஐந்தாமடிமுற்றி, அதனடுத்தஅறை தொடங்கி அம்முறைசென்று முன்னடிதொடங்கிய சேகாரத்தைக் கொண்டு ஆறாமடிமுற்றியவாறு காண்க.

முதலடி தொடங்கிக் குறட்டில்விழுமெழுத்துக்களை யிடஞ்சுற்றிப் படிக்கச்சீராமராமசெயம் என்னும் ராமதோத்திரம் வருதலும், குறட்டினின்றும் ஐந்தாமறைகளில் இடஞ்சுற்றிப்படிக்கத்தருமமேகைதரும் என வருதலுங் காண்க.

-----------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்