காவன்முல்லைப் பூதனார்

274. பாலை
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
5
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக்
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?

தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்