முகப்பு |
அஞ்சில் ஆந்தை |
294. நெய்தல் |
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், |
||
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும், |
||
நொதுமலர் போலக் கதுமென வந்து, |
||
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே; |
||
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் |
||
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத் |
||
தழையினும், உழையின் போகான்; |
||
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே, |
உரை | |
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை |