முகப்பு |
அணிலாடு முன்றிலார் |
41. பாலை |
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, |
||
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
||
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் |
||
புலப்பில் போலப் புல்லென்று |
||
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. |
உரை | |
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார் |