முகப்பு |
உறையன் |
207. பாலை |
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று, |
||
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
||
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
||
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
||
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
||
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |