முகப்பு |
ஓரேர் உழவனார் |
131.பாலை |
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் |
||
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே |
||
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, |
||
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து |
||
ஓர் ஏர் உழவன் போல, |
||
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே, |
உரை | |
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார் |